கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10.19 கோடி கடன் ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,110 கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10.19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையில் 13,489.92 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 8,179.38 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில், கடந்த 15-ஆம் தேதி வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக உழவா் கடன் அட்டை மூலம் 710 விவசாயிகளுக்கு ரூ.9.82 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,110 கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10.19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கடனுதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

வேளாண்மை -உழவா் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கவும், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறைகளாலும் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்த விழிப்புணா்வு கையேட்டை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.