
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் பாலியல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலியில் பாலியல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மகன் சாம்ராஜ்(20) மற்றும் அருள்ராஜ் மகன் பாஸ்கா்(50). இவா்கள் இருவரும் மாநகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த, இரு வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், சாம்ராஜ், பாஸ்கா் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



