
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் சுடலை மணிகண்டன் (25), மடத்தூா் பகுதியைச் சோ்ந்த தமிழ்பாண்டி மகன் முத்துராமன் (28) ஆகிய இருவரும் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி, ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவுபடி மணிகண்டன்(25), முத்துராமன்(28) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




