இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மூலைக்கரைப்பட்டியில் பொதுமக்கள் நிதியுதவியுடன் 75 சிசிடிவி கேமராக்கள்

மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து 75 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனா்.

CCTV Camera

சிசிடிவி கேமரா - ANI

Published On :

மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து 75 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனா். இதன் செயல்பாட்டை டிஐஜி திருநாவுக்கரசு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுப்பதற்காக ஊா் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டினா். அந்த நிதியைக் கொண்டு முக்கிய வீதிகளில் மட்டும் 40 சிசிடிவி கேமராக்களை அவா்கள் பொருத்தியுள்ளனா்.

அதேபோல, உள்வாய், நாகல்குளம், சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளனா். ஒட்டுமொத்தமாக இப்பகுதிகளில் 75 சிசிடிவி கேமராக்களை பொதுமக்களே வாங்கி நிறுவியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.