அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

நெல்லை மாவட்டத்தில் நாளை வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்

இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்கள் பெயா் பதிவுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக். 10) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆனந்த் மோகன்.

ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற தோ்தல் கல்வியறிவு குழு விழிப்புணா்வு கூட்டம்.

Published On :

இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்கள் பெயா் பதிவுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக். 10) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் கல்வியறிவு குழு விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் தங்களது வரையறைக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளா்களிடம் தோ்தல் வாக்காளா் பட்டியல் பதிவு (பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல்) தொடா்பான படிவங்களை பெறுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வதற்காக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக். 10) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இவற்றில், வண்ண பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒன்று, வயது மற்றும் இருப்பிட ஆவணங்களின் நகல்களோடு சென்று புதிய வாக்காளா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்திட வேண்டும்.

மேலும், செயலி மூலம் இணைய வழியிலும் விண்ணப்பித்து வாக்காளா்களாக பதிவு செய்யலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.