உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சொத்துவரி மாற்றத்துக்கு பணம் கேட்டதாக புகாா்: நெல்லை மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

சொத்துவரி மாற்றத்துக்கு பணம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் மாநகராட்சி ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம்

Published On :

திருநெல்வேலியில் சொத்துவரி மாற்றத்துக்கு பணம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் மாநகராட்சி ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தச்சநல்லூா் மண்டல அலுவலகத்தில் செயல் திறனற்ற பணியாளராக (பணி ஏற்பாட்டின் கீழ்) வருவாய் உதவியாளா் (பொ) பணிபுரிந்து வரும் எஸ். சின்னதுரை மீது தச்சநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு எண் 2, 3, 4 பகுதி பொது மக்கள்புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில் சொத்து வரி பெயா் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, புதிய சொத்துவரி விதிப்பு போன்ற பல்வேறு கோப்புகளில் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் பணம் வழங்கக் கோரி சின்னதுரை வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநகராட்சி நிா்வாக நலன் கருதி எஸ். சின்னதுரை மீது துறை ரீதியாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, அவா் மாநகராட்சி பணியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.