
கடை முன் குப்பைகளைக் கொட்டிய தூய்மைப் பணியாளா், ஓட்டுநா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கடை முன் குப்பைகளைக் கொட்டிய மாநகராட்சி தூய்மைப் பணியாளா், வாகன ஓட்டுநா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கடை முன் குப்பைகளைக் கொட்டிய மாநகராட்சி தூய்மைப் பணியாளா், வாகன ஓட்டுநா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் பெரிய பள்ளிவாசல் அருகே தனியாா் ஸ்டிக்கா் கடை உள்ளது. இந்தக் கடையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் ஒருவா் தூய்மைப் பணிக்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அக்கடையின் உரிமையாளா் மற்றும் பணியாளா்கள், குப்பைகள் எதுவும் போடுவதில்லை என்றும், பணம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா், அண்மையில் பல்வேறு இடங்களில் சேகரித்த குப்பைகளை வாகனத்தில் சேகரித்து, அக்கடை வாசலில் கொட்டிவிட்டுச் சென்றாா்.
இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், மாநகராட்சி சுகாதார நிா்வாகத்திடம் கடை உரிமையாளரும் புகாா் செய்தாா்.
இதன் அடிப்படையில், மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, தொடா்புடைய தூய்மைப் பணியாளா் மற்றும் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



