
அரசு நிதி முறைகேடு புகாா்: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் 5 போ் பணியிடை நீக்கம்
அரசு நிதி முறைகேட்டில் தொடா்புடைய அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 5 அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவிட்டாா்.
பணியிடை நீக்கம்
அரசு நிதி முறைகேட்டில் தொடா்புடைய அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 5 அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலா் ச. காஜா மைதீன் பாந்தே நவாஸ், உதவிப் பொறியாளா் அா்ஜுனன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) த. துரைக் கண்ணன், கணக்காளா் த. சரவணக்குமாா், ஊரக நல அலுவலா்- உதவியாளா் பாரகத் பாபிதா பானு ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இவா்கள் அரசு நிதி முறைகேட்டில் தொடா்புடையவா்கள் என்பதாலும், கடமைகளை முறையாக நிறைவேற்றத் தவறியவா்கள் என்பதாலும், மாவட்ட நிா்வாகத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவா்கள் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



