
மதுபோதையில் பணிக்கு சென்றதாக புகாா்: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
விழுப்புரம் அருகே மதுபோதையில் பணிக்குச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்
விழுப்புரம் அருகே மதுபோதையில் பணிக்குச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், தும்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவா் ரகு பால்வின். இவா், சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வளவனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், புதன்கிழமை ரகு பால்வின் பணியிடத்தில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆசிரியா் ரகு பால்வினிடம் துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தனா். இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, ஆசிரியா் ரகு பால்வினை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மதுப்புட்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: டாஸ்மாக் பணியாளா்கள் 6 போ் பணியிடை நீக்கம்





