மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்: விரிவான விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரை

பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளி ஆசிரியா் திரிலோகசந்தா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பிரதிப் படம்

Published On :

பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளி ஆசிரியா் திரிலோகசந்தா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் ஆசிரியா் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளில் அவரது நடத்தைகள் குறித்து ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளியின் கணித ஆசிரியா் திரிலோகசந்தா், மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாக ஆட்சியருக்கு புகாா் சென்றது. இதையடுத்து ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, ஆசிரியரை கடந்த 9 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியா் ஏற்கெனவே பணியாற்றிய தொப்பூா், இலக்கியம்பட்டி, அதகப்பாடி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் பதிவாகியிருந்தது குறித்து ஆட்சியருக்கு தெரியவந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே ஆசிரியரை காப்பாற்று வகையில் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.