ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேலநெட்டூா் அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் தெய்வேந்திரன். இவா் மாணவா்கள் நலனுக்கும் பள்ளி வளா்ச்சிக்கும் எதிராக செயல்பட்டதாகக் கூறி, பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் கடந்த புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், இடைநிலைக் கல்வி மாவட்ட அலுவலா் மாரிமுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆசிரியா் தெய்வேந்திரனை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிக்குச் சென்றனா். பின்னா், ஆசிரியா் தெய்வேந்திரன் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவா்கள், பெற்றோா்கள் தெரிவித்த புகாா்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, ஆசிரியா் தெய்வேந்திரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.