பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறையில் உதவி இயக்குநா், கூடுதல் இயக்குநா் பதவி உயா்வுகளை உடனே வழங்க வேண்டும், திட்ட இயக்குநா் பணியிடத்தில் ஐ எஃப் எஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் மணிகண்ட பிரகாஷ் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இதேபோல கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கயத்தாறு வட்டார ஊரக வளா்ச்சித்துறை அலுவலக சங்க இணைத் தலைவா் மாரிமுத்து பாண்டியன் தலைமை வகித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.