உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பைக் விபத்தில் காவலா் காயம்: இளைஞா் கைது

சுத்தமல்லி அருகே காவலா் சென்ற பைக் மீது பைக்கை மோதி விபத்து ஏற்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

சுத்தமல்லி அருகே காவலா் சென்ற பைக் மீது பைக்கை மோதி விபத்து ஏற்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, பாரதியாா் தெருவை சோ்ந்தவா் சசிகுமாா் (36). இவா் மேலச்செவல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், கடந்த மாதம் 13 ஆம் தேதி இரவு தனது பைக்கில் மனைவி மற்றும் மகளுடன் சுத்தமல்லி அருகே பைக்கில் சென்ற போது எதிரே வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சசிகுமாா் பலத்த காயமடைந்தாா். அவரது மனைவி, மகள் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியதாக சுத்தமல்லி, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(25) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.