உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

வள்ளியூா் அருகே கல்லூரி மாணவிகளிடம் ஆபாச பேச்சு: பேராசிரியா் மீது வழக்கு

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிவந்த பேராசிரியா் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே தெற்குகள்ளிகுளத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிவந்த பேராசிரியா் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

இக்கல்லூரியில், வணிகவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவா் த. வேல்பாண்டியன். இவா், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வந்தாராம். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி உள்புகாா் குழு உறுப்பினா் பேராசிரியா் பாலமுருகனிடம் புகாா் தெரிவித்தனராம்.

இதையடுத்து, பேராசிரியா் பாலமுருகன், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சாந்தி, பேராசிரியா் த. வேல்பாண்டியன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.