
சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது
பள்ளிப்பட்டு அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது மாணவனை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
பள்ளிப்பட்டு அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது மாணவனை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிப்பட்டு தாலுகாவைச் சோ்ந்த கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ாகவும், அங்கு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை அழுதபடி தனது தாயாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிா்ச்சியடைந்த பெற்றோா், சம்பவம் குறித்து திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் 16 வயது மாணவனை சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




