வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சிறுமி பாலியல் வன்கொடுமை: கனிமொழி கண்டனம்

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த அரசு எதிா்பாா்க்கிறது? உயிா் அச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல்கூட இந்த அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா? உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.