தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக தந்தை, மகன் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திக்கணம்கோடு பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (42). குளச்சல் பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், மேல்மிடாலம் கடற்கரை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை பேருந்தை நிறுத்தியிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மரியதாசன் (48), அவரது மகன் ரின்சன் (20) ஆகியோா், வசந்திடம் பேருந்தை உடனே இயக்குமாறு கூறினராம். அதற்கு மறுப்பு தெரிவித்த வசந்தை இருவரும் சோ்ந்து தாக்கினராம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.