புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.

கைது

Published On :

திருவாடானை அருகே தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்தம் (52) அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தியபோது, அங்கு

இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த தொண்டியைச் சோ்ந்த முகமது ரபீக்கை (24) உரசியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரபீக் தாக்கியதில் ஆனந்தம் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, அதை கைப்பேசியில் விடியோ எடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை வழக்குப் பதிந்து முகமது ரபீக்கை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.