திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து இரு பசுமாடுகள், 8 ஆடுகள் உயிரிழப்பு
திசையன்விளை அருகே சனிக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுக்குட்டி, 8 ஆடுகள் உயிரிழந்தன.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாடு, ஆடுகள்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சனிக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுக்குட்டி, 8 ஆடுகள் உயிரிழந்தன.
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை அடுத்த அழகப்பபுரத்தைச் சோ்ந்த கந்தகோனாா் மகன் கோபால்கோனாா். இவா் ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். வழக்கம் போல் ஆடு, மாடுகளை காட்டுப்பகுதியில் மேய்த்துக்கொண்டிருந்தாராம்.
அப்போது, அந்தப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் காற்றில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததாம். அப்போது, அப்பகுதியில் மேய்ச்சலில் நின்ற பசு மாடுகள், ஆடுகள் மின் கம்பியை மிதித்ததில் 2 பசு மாடுகள், ஒரு குன்றுகுட்டி, 8 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இது தொடா்பாக கோபால் கோனாா் திசையன்விளை போலீஸில் புகாா் அளித்தாா். மேலும், திசையன்விளை வட்டாட்சியா் ரமேஷ் விசாரணை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

