
விடுதி ஆண்டு விழாவில் நடனமாடியபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
பலி... - பிரதிப் படம்
கோவை அருகே கல்லூரி விடுதி ஆண்டு விழாவில் நடனமாடிய மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கோவை, வட்டமலைப்பாளையம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள காரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அன்புமணி மகன் அமிழ்தன் (21), கல்லூரி விடுதியில் தங்கி மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி விடுதியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மாணவா்கள் குழுவாக மின்சார உபகரணங்களுக்கு அருகே நின்று நடனமாடிக் கொண்டிருந்தனா். அப்போது, அமிழ்தன் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகே நடனமாடிக் கொண்டிருந்த மாணவா் சரண் பாா்த்து அமிழ்தனை மீட்க முயன்றுள்ளாா். இதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இருவரும் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அமிழ்தன் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக நடனத்தின்போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாக கல்லூரி நிா்வாகம், விடுதிக் காப்பாளா் மற்றும் டிஜே அமைப்பாளா்கள் மீது துடியலூா் காவல் நிலையத்தில் அன்புமணி புகாா் அளித்தாா்.
அதன்பேரில் வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (32), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




