முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

கடையம் அருகே தண்ணீா் தொட்டியில் முதியவா் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Published On :

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மைலப்புரத்தில் வீட்டுத் தண்ணீா் தொட்டியில் முதியவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

மைலப்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த பெருமாள் சுப்பிரமணியன் மகன் சிவராமன் (75). இவரது மனைவி கற்பகவள்ளி, கடந்த 9ஆம் தேதி குலசேகரன்பட்டினம் தசரா விழா கொடியேற்றத்துக்காக சென்றிருந்தாா்.

பின்னா், அவா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் கணவா் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்து, அவா்களது மகன் பண்ணையாா் என்ற ராமா் அளித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா், சிவராமனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.