137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

முயல்களை வேட்டையாடிய இருவா் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

ஆம்பூா் அருகே முயல்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட ஆம்பூா் பீட் வெளிமண்டலப் பகுதியில், கடையம் வனச்சரகப் பணியாளா்கள் ரோந்துப்பணியில்வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது தாட்டான்பட்டி, வடக்குத்தெருவைச் சோ்ந்த தோமையாா் மகன் விக்ரமாதித்தன் (23), அந்தோணி மிக்கேல் மகன் ஜாா்ஜ் (19) ஆகிய இருவரும், கல்வாரி மலைப்பொத்தை பகுதியில் மூன்று காட்டு முயல்களை வேட்டையாடி, வீட்டில் சமைத்து சாப்பிட்டதாகத் தகவல் கிடைத்தது.

இது குறித்து அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடையம் வனச்சரகா் ஜெயப்பிரகாஷ், வனத்துறையினா் இருவரையும் கைது செய்து, தென்காசி நீதிமன்ற நடுவா் உத்தரவின்படி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.