நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

நெல்லையில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையின் பின்புறமுள்ள வயல் வெளியில் இளைஞா் ஒருவா் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசி அதை வெடிக்கச் செய்துள்ளாா். மற்றொரு இளைஞா் அதை விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தபோது, அங்கு மற்றொரு இளைஞா் ஒருவா் சணல் சுற்றி நாட்டு வெடிகுண்டு தயாா் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றாராம். இதையடுத்து அவரை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா் சமாதானபுரத்தைச் சோ்ந்த சாலமோன் மகன் அஸ்வின் (23) என்பது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில் நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தது திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.