என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கோயிலில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் மீது புகாா்

விளாத்திகுளத்தில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் நடனமாடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் மீது கோயில் நிா்வாகம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

விசாரணை

Updated On :

விளாத்திகுளத்தில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் நடனமாடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் மீது கோயில் நிா்வாகம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

விளாத்திகுளம் நகரில் பழைமையான ஸ்ரீமீனாட்சி அம்பாள் உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மனின் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் அதே நாள்களில் இந்தக் கோயிலிலும் நடைபெறும். ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இக்கோயிலுக்கு வந்த இளம்பெண் கோயில் பிரகாரத்தில் நடனமாடி விடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ பதிவிட்டாா்.

தகவல் அறிந்த கோயில் செயல் அலுவலா் உமா மகேஸ்வரி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில், கோயில் பிரகாரத்தில் விடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு, ஏற்கெனவே அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு கோயிலின் மாண்பைக் கெடுத்த சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து, விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.