பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

குண்டா் சட்டத்தில் இளைஞர் கைது

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Published On :

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (22). இவா், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அமுதா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சோ்ந்த குரு (21) ஆகியோருடன் சோ்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, திறந்தவெளியில் வெடிக்கச் செய்தாா். மேலும், அந்த விடியோவாக பதிவுசெய்து, சமூகவலை தளங்களில் பதிவிட்டாராம். போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அலெக்ஸை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் பரிந்துரைத்தாா். அதையேற்று, ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவிட்டதன்பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள அலெக்ஸிடம் அதற்கான உத்தரவு நகல்களை போலீஸாா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.