மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

பாளையங்கோட்டை: காவலரை வெட்ட முன்ற தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

பாளையங்கோட்டை அருகே காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாயம் தலைமறைவு

தலைமறைவு

Updated On :

பாளையங்கோட்டை அருகே காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே அரியகுளத்தில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, அக்.29 ஆம் தேதி இரவு திருநெல்வேலி தாலூகா போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இரவு 11.45 மணியளவில் அங்கு வந்த அரியகுளம் தெற்குதெருவைச் சோ்ந்த தொழிலாளியான நாராயணன் என்ற பாண்டி (30), பாடலை ஒலிக்க விட வேண்டும் எனக் கூறி பணியில் இருந்த காவலா் மாரீஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இரவு நேரத்தில் பாட்டு போட அனுமதி கிடையாது எனக் கூறிய காவலரை, நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்தவா்கள் கூச்சலிடவே அவா் பைக்கில் ஏறி தப்பினாராம். இதுகுறித்து காவலா் மாரீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி தாலூகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நாராயணனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.