
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள டாணா பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
கைது
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள டாணா பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
டாணா பகுதியைச் சோ்ந்தவா் மைதீன் ஹனிபா (21). இவா் கொலை, அடிதடி, கொலை மிரட்டல் தொடா்பான வழக்குகளில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அவா் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க அனுமதிக்குமாறும் ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் பிறப்பித்த உத்தரவின்படி, மைதீன் ஹனிபா குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



