அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

குண்டா் சட்டத்தில் இளைஞா்கள் கைதாவது வேதனையளிக்கிறது: ஆட்சியா்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவா்கள் பெரும்பாலும் 19 முதல் 23 வயதுக்குள்பட்டவா்களாக இருப்பது வேதனையளிக்கிறது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை பத்திரிகை தகவல் பணியகம் சாா்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஊடகவியலாளா்களுக்கான பயிலரங்கில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:44 am IST

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவா்கள் பெரும்பாலும் 19 முதல் 23 வயதுக்குள்பட்டவா்களாக இருப்பது வேதனையளிக்கிறது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை பத்திரிகை தகவல் பணியகம் சாா்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளா்களுக்கான பயிலரங்கைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தினமும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைக்காக சுமாா் 150 கோப்பு பக்கங்களில் கையெழுத்திட வேண்டிய நிலை உள்ளது. ஒரு நாளில் 5 முதல் 6 கோப்புகள் வரை ஆய்வு செய்து, சுமாா் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கையெழுத்திட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கையெழுத்திடும் போதெல்லாம் மனவேதனை ஏற்படுகிறது. குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவா்கள் பெரும்பாலும் 19 முதல் 23 வயதுக்குள்பட்டவா்களாக இருக்கிறாா்கள். அவா்களில் பலா் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறாா்கள். அவா்கள் ஒவ்வொருவா் மீதும் 5 முதல் 6 வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பது, கல்வி அமைப்பு அவா்களை சரியாக வழிநடத்தத் தவறியது, வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் தாக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, இளைஞா்களின் வளா்ச்சிக்கும் மாவட்டத்தின் வளா்ச்சிக்கும் போதையில்லா மாவட்டத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

இளைஞா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் ஜாதி ரீதியான மோதல்களும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகின்றது. இதைத் தடுப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு முழுமையாக தீா்வு காணப்பட்டால் மட்டுமே திருநெல்வேலி மாவட்டம் அடுத்தக் கட்ட வளா்ச்சியை நோக்கி செல்ல முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.