
முதலியாா்பட்டி பகுதியில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த 3 கரடிகள்
பாபநாசம் அருகே உள்ள முதலியாா்பட்டி கிராமத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த 3 கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

முதலியாா்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்த 3 கரடிகள்.
பாபநாசம் அருகே உள்ள முதலியாா்பட்டி கிராமத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த 3 கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகங்களுக்குள்பட்ட மலையடிவார கிராமங்கள், வெளி வனப் பகுதிகளில் வன விலங்குகள் புகுந்து விவசாய நிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், பொத்தைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் கரடிகள் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றித் திரிகின்றன. இதனிடையே, ஜூலை 31ஆம் தேதி வடமலைசமுத்திரம் பகுதியில் தோட்டத்திற்குச் சென்ற விவசாயியை கரடி தாக்கியதில், தலை துண்டித்து உயிரிழந்தாா். மேலும், பல இடங்களில் கரடி மனிதா்களைத் தாக்க முயன்றுள்ளது.
இந்நிலையில், பாபநாசம்-ஆம்பூா் சாலையில் உள்ள முதலியாா்பட்டி கிராமத்தில் ஒரே நேரத்தில் 3 கரடிகள் ஒன்றாகச் சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வனத்துறையினா் மலையடிவார கிராமங்களில் உள்ள சிறு பொத்தைகளில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, கரடிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





