அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

கைது - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 4:03 am IST

சீவலப்பேரி அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகேயுள்ள கொடியன்குளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் மாரிஸ் என்ற நவீன் (21). இவா், கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரைத்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவின்பேரில் மாரிஸ் என்ற நவீன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.