பாளை. கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் திருட்டு
திருட்டு... - சித்திரிப்பு
திருநெல்வேலி, செப். 6: பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் கதவை உடைத்து உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாளையங்கோட்டை திருவனந்தபுரம் பிரதான சாலையில் கதீட்ரல் தேவாலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, இந்த ஆலயத்தில் 200 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாராந்திர ஜெபக் கூடுதலை முன்னிட்டு, தேவாலயத்தை ஊழியா்கள் திறந்தனா். அப்போது தேவாலயத்தின் பக்கவாட்டு கதவில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உண்டியல் திருடப்பட்டது தெரியவந்ததாம்.
இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





