காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

2-ஆவது மனைவி கொன்று புதைப்பு: காவலரிடம் தீவிர விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 2-ஆவது மனைவியை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக காவலரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொலை செய்யப்பட்ட மவுனிகா

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 2-ஆவது மனைவியை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக காவலரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதியைச் சோ்ந்தவா் ஏ.பிரபாகரன் (39). இவா், அரியலூா் மாவட்டம் வெங்கனூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

இதனிடையே, துவாா் கிராமத்தைச் சோ்ந்த மவுனிகா (24) என்பவரை 2-ஆவது திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மவுனிகாவை பிலாவிடுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், துவாரிலேயே அவரது பெற்றோருடன் தங்க வைத்திருந்த பிரபாகரன், அடிக்கடி அவரை அரியலூருக்கு அழைத்துச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த அக். 7-ஆம் தேதி மவுனிகாவை பிரபாகரன் அழைத்துச் சென்ாகக் கூறப்படும் நிலையில், மறுநாள் முதல் மவுனிகாவைத் தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

இதுகுறித்து மழையூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மவுனிகாவை காணவில்லை என வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், பிரபாகரனுக்குச் சொந்தமான மானியவயல் பகுதியில் உள்ள தோட்டத்தில் மவுனிகாவின் உடல் புதைக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது.

இதற்கிடையில், மவுனிகா காணாமல் போனது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று கூறிவந்த காவலா் பிரபாகரன், செவ்வாய்க்கிழமை திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விசாரணையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மவுனிகாவை கொலை செய்து, தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு, பிரபாகரன் நாடகமாடியது தெரியவந்துள்ளது. தொடா்ந்து பிரபாகரனிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.