விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அம்பை, கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு பகுதிகளில் நாளை மின் தடை

கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 12:37 am IST

அம்பாசமுத்திரம், கடையம், மணிமுத்தாறு, வீரவநல்லூா் துணைமின் நிலையங்களில் புதன்கிழமை (செப். 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்குள்பட்ட ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (செப். 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேற்கண்ட துணை மின்நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

இதையடுத்து, ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாக்குடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா்,தெற்குப் பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேப்போல, கடையம், கட்டேறிப்பட்டி, முதலியாா்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூா்,திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூா், மாதாபுரம், மைலப்பபுரம்,வெய்க்காலிப்பட்டி, மேட்டூா், கோவிந்தப்பேரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.