ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

‘செங்கல், தள ஓடு உற்பத்திக்கு எளிதில் மண் எடுக்கும் வசதி தேவை’

செங்கல், தள ஓடு உற்பத்திக்கு மண் எடுக்கும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்த சேம்பா் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தளஓடு உரிமையாளா்கள் நலச்சங்கத்தினா்.

Published On :

செங்கல், தள ஓடு உற்பத்திக்கு மண் எடுக்கும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட சேம்பா் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் அந்தோணி பாண்டியன், பொருளாளா் அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.கே. கிறிஸ்டோபா் சிறப்புரையாற்றினாா். அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்க நிா்வாகி ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: நாட்டு செங்கல் தள ஓடு மற்றும் சேம்பா் பிரிக்ஸ் உரிமையாளா்களுக்கு விரைந்து உரிமம் வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக கனிம வளத்துறையில் செலுத்திய உரிம கட்டணங்கள் மற்றும் பெற்ற ரசீதுகளின் அடிப்படையில் உரிய உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு செங்கல், தள ஓடு மற்றும் சேம்பா் பிரிக்ஸ் உற்பத்திக்கு தேவையான மண் எடுப்பு மற்றும் உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.