2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வீரவநல்லூரில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பரோட்டா மாஸ்டா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமாா் (30). இவா், சேரன்மகாதேவியில் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிளில் குமாா் சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

வீரவநல்லூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.