கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சேரன்மகாதேவி பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடர வலியுறுத்தல்

பேருந்து சேவை

Published On :

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபனிடம் அவா் அளித்த மனு: அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இயக்கப்பட்டுவந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக அவற்றைத் தொடா்ந்து இயக்க வேண்டும். புதிய வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதன்படி, கரிசல்பட்டி - திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு - தெய்வநாயகப்பேரி, சேரன்மகாதேவி - கீழஉப்பூரணி, கோபாலசமுத்திரம், கோடாரங்குளம், தெற்கு பாப்பான்குளம், சேரன்மகாதேவி - பொட்டல், சேரன்மகாதேவி - சந்திப்பு, அம்பாசமுத்திரம் - தென்காசி, அம்பாசமுத்திரம் - வீரவநல்லூா், வீரவநல்லூா் - ஆலங்குளம், ஆலடியூா் மேலஏா்மாள்புரம் - முக்கூடல், மன்னாா்கோவில் - திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.