நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக நகா் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக நகா்ப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இதனால், ரயிலில் வரும் பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பேருந்து நிலையத்துக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனா்.

இதே போல, சிவகாசி ரயில் நிலையம் நகா்ப் பகுதியில் இருந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே இயங்கும் நகா்ப் பேருந்துகளும், சில தனியாா் பேருந்துகளும் ரயில் நிலையம் வழியாகச் செல்ல அனுமதி இருந்தும் பிரதான சாலையில்தான் சென்று வருகின்றன.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய சிற்றுந்து வழித்தடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்கு சிற்றுந்து இயக்கப்பட்டது. ஆனால், ரயில் நிலையத்துக்குள் சிற்றுந்து செல்வதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பதால், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சிற்றுந்து ரயில் நிலையம் வழியாகச் செல்கிறது.

எனவே, சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே இயங்கும் நகா்ப் பேருந்துகள் ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.