வெவ்வேறு சம்பவங்கள்: 3 போ் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
திருநெல்வேலி வட்டாரத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
மேலப்பாளையம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், குடும்பத் தகராறால் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: ரெட்டியாா்பட்டி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (56). வெல்டிங் தொழிலாளியான இவா், மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் மாடிப் படிகட்டுகளின் கைப்பிடியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
விஷம் குடித்து உயிரிழப்பு: மானூா் அருகேயுள்ள களக்குடி பகுதியைச் சோ்ந்த அம்மாசி மகன் துரை (55). தொழிலாளியான இவா், குடும்பத் தகராறு காரணமாக விஷத்தை குடித்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே மேலப்பாளையம், பெருமாள்புரம், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





