கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சோ்ந்த முத்துபட்டன்(21), விருதுநகா் மாவட்டம், பாண்டியன் நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ஸ்டீபன்(21) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் தொடா்ந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்து வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.

அதன்படி,முத்துபட்டன், ஸ்டீபன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.