வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கூட்டப்புளியில் மீனவா் குத்திக் கொலை

குத்திக் கொலை - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளியில் குடும்பத் தகராறில் சனிக்கிழமை இரவு மீனவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கூட்டப்புளி, பாத்திமா கோயில் தெருவைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (45). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய இவரது மனைவிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த ஜெபமாலை மகன் மீனவா் அனீஷ் (24), தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளாா்.

இதனால், அனீஷ் வீட்டிற்குச் சென்ற லாரன்ஸ், இதைத் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரன்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிறையில் இருந்து வெளியே வந்த லாரன்ஸ், சனிக்கிழமை அனீஷ் வீட்டிற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைக் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அனீஷை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரன்ஸை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.