பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேச்சிப்பாறை ஊராட்சியில்  ரூ. 3 கோடியில் சாலை மேம்பாடு

பேச்சிப்பாறை ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:19 pm

dinamani

பேச்சிப்பாறை ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் எஸ். ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பேச்சிப்பாறை ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.3 கோடியே 4 லட்சம் சிறப்பு நிதி மூலம் சாலை வசதியில்லாத கிராமங்களில் சாலைவசதி செய்யவும், ரூ. 1.42 லட்சத்தில் பழங்குடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய மின் விளக்குகள் அமைக்கவும், 2006 வன உரிமை பாதுகாப்புச் சட்டப்படி பழங்குடி கிராமங்கள் வரைமுறைக்குள்பட்டு  தனித்தனி கிராம சபைகளாக இயங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.