இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பேரணி, கூட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டையொட்டி நாகர்கோவிலில் இளைஞர்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:57 am IST

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டையொட்டி நாகர்கோவிலில் இளைஞர்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நாகர்கோவில் கலைவாணர் கலையரங்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு மே 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மாநாட்டை அகில இந்தியத் தலைவர் எம்.பி. ராஜேஷ் தொடக்கிவைத்தார். சனிக்கிழமை மாலை கருத்தரங்கு நடைபெற்றது. இளைஞர் முழக்கம் ஆசிரியர் இல. சண்முகசுந்தரம் தலைமையில் கே. சந்துரு, பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் பேசினர்.

 ஞாயிற்றுக்கிழமை மாநாடு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத் தலைவர் பரத்ராஜ், ஆந்திர மாநிலச் செயலர் கே. பாஸ்கர் வாழ்த்திப் பேசினர்.

 பின்னர், இளைஞர்கள் பங்கேற்ற பேரணி நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பிலிருந்து  தொடங்கியது. அகில இந்திய பொதுச் செயலர் அவாய் முகர்ஜி பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

 செட்டிக்குளம், கோட்டாறு, மீனாட்சிபுரம், நாகராஜா கோவில் வழியாக பேரணி கலையரங்கை அடைந்தது. அங்கு அவாய் முகர்ஜி மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். வேல்முருகன், மத்தியக்குழு உறுப்பினர்கள் இல. சண்முகசுந்தரம், என். கல்பனா, சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் டி.கே. ரங்கராஜன் பேசினர்.

 மாவட்டச் செயலர் என். ரெஜீஸ்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி. சகிகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.