இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

"பழந்தமிழ் மக்களின் பண்பாட்டை எடுத்துக்கூறுவது இரட்டைக் காப்பியங்கள்'

இரட்டை காப்பியங்கள் பழந்தமிழ் மக்களின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துக்கூறுவதாக முன்னாள் துணைவேந்தர் இரா.தி. சபாபதிமோகன் தெரிவித்தார்.

Updated On :9 ஜனவரி 2015, 12:35 am IST

இரட்டை காப்பியங்கள் பழந்தமிழ் மக்களின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துக்கூறுவதாக முன்னாள் துணைவேந்தர் இரா.தி. சபாபதிமோகன் தெரிவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் ஆகியன சார்பில், இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை கல்லூரியில் கருத்தரங்கம் தொடங்கியது.

கல்லூரித் தலைவர் பெ. ஆறுமுகம் பிள்ளை தலைமை வகித்து தொடங்கிவைத்தார். துணைத் தலைவர் ச. கோபாலன், செயலர் அ. பெருமாள்பிள்ளை, இணைச் செயலர் வே.நாகராஜன், பொருளாளர் ம. மகராஜபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரை தொகுப்பு நூலை கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளை வெளியிட அதை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இரா.தி. சபாபதிமோகன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியது:

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை பழந்தமிழ் மக்களின் பண்பாட்டையும் மதிப்பீடுகளையும், பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்றைய மாணவர்கள், சிலப்பதிகாரம் கூறும் நல்ல கருத்துகளை பின்பற்ற வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும்.

மணிமேகலையில் பசிப்பிணி பற்றி கூறப்பட்டுள்ளது. வசதிப்படைத்தவர்கள் ஏழைகளுக்கு உணவு அளித்து பசியாற்ற வேண்டும் என்றார் அவர்.

கல்லூரி முதல்வர் சு. பெருமாள் வாழ்த்திப் பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தா. நீலகண்டபிள்ளை வரவேற்றார். இணைப் பேராசிரியர் தெ.வே. ஜெகதீசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.