அருமனை அருகே வடிகாலில் பாய்ந்த அரசுப் பேருந்து
அருமனை அருகே விபத்திற்குள்ளாகி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை எடுத்துச் செல்லும் போது அந்தப் பேருந்து மீண்டும் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் பாய்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அருமனை அருகே விபத்திற்குள்ளாகி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை எடுத்துச் செல்லும் போது அந்தப் பேருந்து மீண்டும் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் பாய்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்த்தாண்டத்திலிருந்து முக்கூட்டுக்கல்லிற்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரங்கோடு பகுதியில் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அருமனை போலீஸார் விபத்துக்குள்ளான பேருந்த காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பேருந்தை அரசுப் போக்குவரத்துக் கழக மார்த்தாண்டம் பணி மனை ஊழியர்கள் திங்கள்கிழமை மாலையில் எடுத்துச் சென்றனர். இதில் நெடுங்குளம் பகுதியில் சென்ற போது பேருந்து மீண்டும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமுள்ள வடிகாலில் பாய்ந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

