ஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

ரயில் முன் பாய்ந்து தொழிலாளி சாவு

களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Published On :

களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

களியக்காவிளை அருகே குறுமத்தூர் - கழுவன்திட்டை ரயில் பாதையில், திங்கள்கிழமை காலையில் ரயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர்  களியக்காவிளை அருகேயுள்ள உண்டனாகுழி பகுதியைச் சேர்ந்த பாறை உடைக்கும் தொழிலாளியான மோகன் (45) என்பது தெரியவந்தது. மேலும், மது அருந்தும் பழக்கம் உடைய இவருக்கு கடன் தொல்லையும் இருந்து வந்ததாம். இவரை விட்டு மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனராம். இந்நிலையில் இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தூக்கிட்டுத் தற்கொலை: கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி. கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் மனைவி தீபாவுடன் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.