
இலவச மருத்துவ முகாம்
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு திருஇருதய (சேக்ரட் ஹார்ட்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு திருஇருதய (சேக்ரட் ஹார்ட்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
படந்தாலுமூடு திருஇருதய மெட்ரிக் பள்ளியும், பாறசாலை எஸ்.பி. மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். முகாமில், குழந்தைகளுக்கான மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமை, தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார். படந்தாலுமூடு திருஇருதய மெட்ரிக் பள்ளித் தாளாளர் ரோபின்ஸ் குழிக்கோடில் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் அருள்தந்தை பிரின்ஸ் மாலியில், விளவங்கோடு தொகுதி அதிமுக செயலர் உதயகுமார், பேரூராட்சித் தலைவி ஆஷா டயானா, எஸ்.பி. மருத்துவமனை பொதுமேலாளர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், மருத்துவர்கள் பிரான்சிஸ் லாயர், பிஜுமோசஸ் பாஸ்கரம், பாசில் ஜெ. போஸ்கோ, சித்தார்த்தன் ரவீந்திரன், இவாஞ்சலின் ஜெபா, பாபுசங்கர், பெட்ஸி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். முகாமில் ஏராளமானோர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






