
சிவாலய ஓட்ட பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவராத்திரி சிவாலய ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கி செவ்வாக்கிழமை வரை நடைபெறுகிறது. முதலாவது சிவாலயமான திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கி 12 ஆவது சிவாலயமான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் இந்த ஓட்டம் நிறைவடைகிறது.
110 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் பக்தர்கள் பயணம் செய்யும் சாலை பக்தர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் மற்றும் பக்தர் சங்க அமைப்புகள் புகா தெரிவிக்கின்றன. குறிப்பாக பல இடங்களில் சாலையோரங்களில் ரப்பர் மரத்தடிகள் குவிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கருங்கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் முக்கிய நகர சந்திப்புகளில் தேவையற்ற வகையில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் மேலாக பெரும் பகுதி சாலையில் குழிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் விரைந்து செயல்பட்டு பக்தர்கள் இரவு நேரங்களில் தடையின்றி செல்லவும், பாதுகாப்பாகச் செல்லவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






