அகஸ்தீசுவரம் ஒன்றியம், இடலாக்குடியில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகம் மிகவும் சேதமுற்றுள்ள நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகஸ்தீசுவரம் வட்டார மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் யு.தியாகராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்துடன் இணைந்திருந்தபோது மரப்பலகை மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டது இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகம். தற்போது, ஆண்டுகள் பல கடந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அங்குள்ள ஆவணங்கள், பழைய பத்திரங்களின் நகல்கள் அழிந்த நிலையில் உள்ளன.
இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களின் முக்கியமான ஆவணங்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி இந்தக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். 15 நாள்களுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்காவிடில், 7 கிராம மக்களைத் திரட்டி இவ்வலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

ஈரான் - அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமில்லை!

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


