குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் கல்லூரி ஸ்தாபக தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவரும், முதல்வருமான சி.கே.மோகன் தலைமை வகித்தார். கே.வி.அறக்கட்டளை இயக்குநர் சந்திரலேகா மோகன் குத்துவிளக்கேற்றினார். கே.வி. கிருஷ்ணன் நாயர், பி. சாரதா அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு கல்லூரி அறங்காவலர் எம்.சி. பவ்யா மலரஞ்சலி செலுத்தினார். பிக் நியூஸ் லைவ்.காம் செய்தி நிறுவன தலைமை ஆசிரியர் கே. பாலசந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். கல்லூரி ஆலோசகர் ரவி எம். நாயர் கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டார். கல்லூரி அறங்காவலர் சபரிஷ் பி. நாயர், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்லூரி இணை பேராசிரியர் வி. ஹரிசங்கர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.