திங்கள்சந்தை - மணவாளக்குறிச்சி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் குழித்துறை தாமிரவருணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கன்னியாகுமரி வரை குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழாய்கள் பல நேரங்களில் சேதமடைவதால், நீர்கசிவு ஏற்பட்டு சாலை சேதமடைவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணிக்கு, மணவாளக்குறிச்சி - திங்கள்நகர் சாலையில், சேரமங்கலம் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாய் உடைந்தது. இதில் தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடித்ததால் சாலையில் பெரும்பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சாலை சேதமடைந்ததால் இப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.